இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவித்ததையடுத்து ரெப்போ வட்டி வீதமானது ஆறு சதவீதத்திலிருந்து 5.5% தங்களுடைய வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதனையடுத்து யுகோ வங்கி ஜூன் 10 ஆம் தேதி முதல் காலாண்டுகளுக்கான நிதி சார்ந்த கடன் விகிதத்தை குறைப்பதாக அறிவித்திருக்கிறது. அதேபோல யூகோ வங்கி எம்சிஎல்ஆர் விகிதத்தை 10% குறைத்துள்ளது. இதன் மூலமாக 8 .25 சதவீதத்திலிருந்து 8.15 சதவீதமாக குறைந்துள்ளது.
அதேபோல ஒரு மாதத்திற்கான வட்டி விகிதம் முன்பு 8.45 சதவீதத்திலிருந்து 8.35% ஆகவும், 3 மாத காலத்திற்கான வட்டி விகிதம் முன்பு இருந்த 8.60 சதவீதத்திலிருந்து 8.5 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல ஆறு மாதத்திற்கான வட்டியானது 8.90 சதவீதத்திலிருந்து 8.80 சதவீதமாக குறைந்துள்ளது. ஒரு வருடத்திற்கான வட்டி விகிதம் 9.10 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறைந்துள்ளது. கரூர் வைசியா வங்கி ஆறு மாத எம்சிஎல் மற்றும் 12 மாத MCLR விகிதங்கள் இரண்டையும் குறைத்துள்ளது .ஆறு மாதங்களுக்கான வட்டி விகிதம் 9.9% குறைந்துள்ளது. அதேபோல 12 மாதங்களுக்கான வட்டி விகிதம் 10% இலிருந்து 9.8 சதவீதமாக குறைந்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியும் & பேங்க் ஆப் இந்தியா வங்கியும் கடன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. ஆனால் வட்டி வீதத்தை குறைக்கவில்லை.
