கோவில் உண்டிகளில் தில்லாலங்கடி திருட்டு… விசித்திரமான முறையில் மொத்த பணத்தையும் காலி செய்த திருடன்… ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 22, 2025

Spread the love

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தோகலபூடி கிராமத்தின் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவிலில் ஒரு தனித்துவமான திருட்டு சம்பவம் நடந்துள்ளது. பொதுவாகவே உண்டியலை உடைத்து தான் பணம் திருடுவார்கள். ஆனால் சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகி வரும் வீடியோவில் திருடன் தன்னுடைய செயல் திறன் மூலமாக கண்களை மாயச் செய்யும் காட்சியை வெளியாகி உள்ளது. திருடன் முன்கூட்டியே கொண்டுவரப்பட்ட ஒரு மெல்லிய வயரை பயன்படுத்தி அதில் பபுல்கம் ஒட்டி பிறகு உண்டியலுக்குள் நுழைத்து, உள்ளே உள்ள பணத்தை மெதுவாக மேலே இழுத்து எடுத்துள்ளார். இதனால் பணம் ஒட்டிக்கொண்டு அப்படியே வருகிறது.

இந்த செயலால் பணம் அடிக்கடி திருடு போய் இருப்பதை கவனித்த கோவில் நிர்வாகம் சந்தேகத்தில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்தனர். இதன் மூலம் திருட்டு முறையை முழுமையாக பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நெட்டிசன்கள் இதனை ஒரு கலைஞரை போன்ற செயல்பாடு என்று விமர்சித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த மாதிரியான திருட்டு சம்பவங்கள் தடுப்பதற்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.