தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒருசில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை குறித்து ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர அனைத்து வகைப் பள்ளிகளிலுமே படிக்கும் மாணவர்களுக்கும் பருவமழை காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை ஆசிரியர்கள் அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
