பொதுவாகவே உடல் எடை அதிகமாக இருக்கும் போது அதனை குறைக்க முடியாமல் பலரும் சிரமப்படுவார்கள். தற்போது மக்களின் உணவு பழக்கம் என்பது நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருவதால் உடல் எடை கணிசமாக அதிகரித்து விடுகிறது. அதன் பிறகு உடல் தோற்றத்தை கண்டு அச்சப்பட்டு மீண்டும் உடல் எடையை குறைக்க பலரும் போராடுகின்றனர். தற்போது மக்களின் பழக்கவழக்கத்தின் காரணமாக பலரும் பலவித மருந்துகளை உட்கொள்வது உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.
ஆனால் சிலருக்கு உடற்பயிற்சி செய்வதற்கே நேரமில்லாமல் இருக்கும். ஒரு சிலர் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளாமல் கெட்ட கொழுப்பை வளர்த்து வைத்திருப்பார்கள். உடலில் தேவையற்ற இடத்தில் தாறுமாறாக கொழுப்பு படிவதால் தான் உடல் எடை அதிகரித்து விடுகிறது. அதன்படி தற்போது உடல் எடையை குறைக்கும் ஒரு கொடியை உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். அப்படி செய்தால் உடல் எடை குறைந்து தொங்கும் தொப்பை காணாமல் போய்விடும்.
தேவையான பொருட்கள்:
ஒரு கப் கொள்ளு
உளுத்தம் பருப்பு 1/4 கப்
கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் காரத்திற்கு ஏற்ப
கருவேப்பிலை
பெருங்காயம்
உப்பு
செய்முறை:
ஒரு கனமான பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதில் கொள்ளு சேர்த்து லேசான தீயில் நன்கு வாசம் வரும் வரை அது சிவந்து பழுப்பு நிறத்திற்கு மாறும் வரை வறுக்க வேண்டும். வறுத்த கொள்ளை ஒரு தட்டில் மாற்றி நன்றாக ஆற வைக்க வேண்டும். அடுத்து அதே பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சேர்க்காமல் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் தனித்தனியாக பொன்னிறமாக வதக்கி எடுக்கவும். இதில் மிளகாயின் காம்புகளை நீக்கிய பிறகுதான் மறுக்க வேண்டும். இறுதியாக கருவேப்பிலை மற்றும் பெருங்காயத்தை லேசாக வறுக்கவும். அனைத்து பொருட்களையும் நன்றாக ஆற வைத்து ஒரு மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த பொடியை மிகவும் நைசாக இல்லாமல் சற்று கொரகொரப்பாக அரைப்பது கூடுதல் சுவைத்தரும். அரைத்த கொள்ளு பொடியை காற்று புகாத கண்ணாடி டப்பாவில் சேமித்து வைத்து சூடான இட்லி, தோசை அல்லது சாதத்துடன் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிடலாம். இதனை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அப்படியே குறைந்தது வாரத்தில் நான்கு முறை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். ஏனென்றால் இழைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழிக்கு ஏற்ப இது உகந்ததாக இருக்கும்.
