“அம்மா ரொம்ப வயிறு வலிக்குது”… 15 வயது சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோருக்கு பேரதிர்ச்சி… ஓய்வு பெற்ற 59 வயது ராணுவ வீரர் செய்த கொடூரம்…!

By Nanthini on கார்த்திகை 11, 2025

Spread the love

மராட்டிய மாநிலம் மும்பையின் ஷம்பார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவை ஏற்பட்ட நிலையில் சிறுமியின் குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த போது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி கூறிய தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

அதாவது அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் (59) சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. அதுமட்டுமல்லாமல் இது தொடர்பாக யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் அந்த நபர் சிறுமியை மிரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்த நிலையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.