கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்சி நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டத்தோடு டிஜே நடந்தது. அப்போது அங்கு வந்த மாப்பிள்ளைக்கு நண்பர்கள் மதுபோதையில் மேடையில் ஏறி குத்தாட்டம் போட்டார்கள். அதுமட்டுமின்றி மாப்பிள்ளையை ஆட வைத்தார்கள். அதோடு அவர்கள் நின்று விடாமல் மணப்பெண்ணையும் அழைத்து ஆடுமாறு அழைத்துள்ளார்கள் .ஆனால் அதற்கு அந்த பெண் தனக்கு ஆடி பழக்கம் இல்லை என்றும் தன்னால் ஆட முடியாது என்றும் கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து அந்த வாலிபர்கள் வற்புறுத்தியதால் அப்பெண்ணின் உறவினர்கள் எங்கள் வீட்டுப் பெண் ஆட மாட்டார் என்று அந்த வாலிபர்களை கண்டித்துள்ளனர்.
அப்போது கோபம் அடைந்த அந்த வாலிபர்கள் மணமகளின் உறவினர்களோடு சண்டையிட்டதில் தகராறு கைகலப்பாக முடிந்துள்ளது. இதை பார்த்துக் கொண்டிருந்த மணமகள் இந்த மாப்பிள்ளையை இனி நான் திருமணம் செய்ய மாட்டேன் . திருமணத்தை நிறுத்துங்கள் என்று சொல்லி கழுத்தில் இருந்த மாலையை கழற்றி உள்ளார். இதனால் இந்த திருமணம் வரவேற்போடு நின்று போனது. பின்பு மணப்பெண் வீட்டார்கள் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டனர். மறுநாள் காலையில் தான் மாப்பிள்ளைக்கும் மதுபோதையில் இருந்த மாப்பிள்ளை நண்பர்களுக்கும் தாங்கள் செய்தது தவறு என்பதை உணர்ந்துள்ளார்கள். ஆனால் குடியால் ஒரு திருமணமே நின்று போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக, நாட்டின் கல்வித்துறையையும் லட்சக்கணக்கான மாணவர்களின்…
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து…
ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே உணவு…
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரிடம்…
தமிழக அரசியலில் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிரடித் திருப்புமுனை நிகழ்ந்துள்ளது. ஒருகாலத்தில் தமிழகத்தின் அசுர பலம் வாய்ந்த…
வங்கித் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள நம்ம ஊர் இளைஞர்களுக்கு ஒரு புதிய வேலைவாய்ப்புச் செய்தியை இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான…