“அமைச்சரவையை விட்டு விலகுவோம்”…. விஜய்க்கு செக் வைத்த காங்கிரஸ் மேலிடம்… கூட்டணியில் வெடித்த பிரளயம்….!

By Nanthini on புரட்டாதி 1, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால் தமிழக வெற்றி கழகக் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அசோகன் சாலமன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இந்த முடிவு உறுதியானால் தங்களது அமைச்சரவை பதவியை ராஜினாமா செய்யத் தயங்க மாட்டோம் என்று காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் பகிரங்கமாக எச்சரித்திருந்த நிலையில், தற்போது மேலிட பார்வையாளரின் இந்த அறிவிப்பு தவெக தலைமைக்கு கூடுதல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

தவெக அரசு அமைவதற்குத் தொடக்கம் முதலே ஆதரவளித்து வந்த முதன்மை கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் இந்த திடீர் நிலைப்பாடு, கூட்டணிக்குள் பெரும் பிளவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும், இது முதல்வர் விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்குப் பெரிய சவாலாக அமையும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.