காலையிலேயே பரபரப்பு…. 2026 தேர்தலில் போட்டியில்லை…. சீமான் திடீர் அறிவிப்பு….!

By Nanthini on கார்த்திகை 24, 2025

Spread the love

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, திருச்சியில் வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி மாநாடு நடத்துகிறோம். அதில் புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். மாஹி, ஏனாம் தொகுதியில் போட்டியிட மாட்டோம். தமிழகமே மதுவை நம்பி தான் ஆட்சி நடத்துகிறது. எந்த வடிவத்தில் வந்தாலும், எப்படி வந்தாலும் மது வந்து ஒரு விஷம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மதுவை விற்று வரக்கூடிய வருவாயில் நலத்திட்டம் என்பது பைத்தியக்காரத்தனம். விஷத்தை கொடுத்துவிட்டு உனக்கு நல்லது செய்கிறேன் என்பதை என்ன மாதிரியான செயல்.

அந்த மாதிரி தான் அதுவும். சென்னை விமான நிலையத்தில் பறப்பதற்கே விமானம் இல்லாத போது ஐந்தாயிரம் ஏக்கரில் விமான நிலையம் ஏன் கட்டப்படுகிறது. சென்னையில் காமராஜர், வ உ சி துறைமுகங்களில் ஏற்கனவே 50 விழுக்காடுகள் தான் வேலை நடைபெறுகிறது. அப்படி இருக்கும்போது 6111 ஏக்கர் எதற்கு துறைமுகம். கொளத்தூரில் போலி வாக்கு பதிவாகி இருக்கு என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கின்றார். இதனை நீங்கள் எப்போது கண்டுபிடிக்க முடியும். இன்னும் தேர்தல் இரண்டு மாதத்தில் வரப்போகிறது. இப்போ சொல்றீங்க, வெற்றி செல்லாது என்று அறிவிக்க தயாரா என்ற சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

   

பிப்ரவரி 7ம் தேதி வாக்காளர் இறுதிப்பட்டியலை அறிவிப்பீர்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள். அதுக்குள்ள தேர்தல் தேதியும் அறிவித்து விடுவீர்கள். அப்படியென்றால், மீண்டும் என்னுடைய வாக்கை புதுப்பிக்க அவகாசம் எனக்கு இருக்குமா? பிப்ரவரி 7ம் தேதி திருச்சியில் மாநாடு நடத்துகிறோம். அதில், புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். மாஹி, ஏனாம் தொகுதியில் போட்டியிட மாட்டோம் என்று சீமான்  கூறினார்.