“அன்புமணியை தலைவராக ஏற்க முடியாது”…. பாமகவிலிருந்து வெளியேறி அதிரடியாக புதிய கட்சி தொடங்கும் அருள்?… தமிழக அரசியலில் திடீர் பூகம்பம்…!

By Nanthini on ஆடி 16, 2026

Spread the love

பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸின் தீவிர ஆதரவாளரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள், கட்சியின் தற்போதைய தலைவர் அன்புமணி ராமதாஸை தலைவராக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து, புதிய கட்சி தொடங்குவது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தனது ஆதரவாளர்களுடன் நடத்திய முக்கிய ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், எப்போதும் தனக்கு மருத்துவர் இராமதாஸ் மட்டுமே கடவுள் என்றும், அவரது வழியையே தான் என்றும் பின்பற்றி நடக்கப்போவதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அதேவேளையில், அன்புமணியின் தலைமைக்குக் கீழ் செயல்பட விரும்பவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்த அருள், தங்களது அடுத்தகட்ட அரசியல் பாதை என்ன என்பது குறித்து ஆதரவாளர்களுடன் தீவிரமாக விவாதித்து வருவதாகவும், அதுகுறித்த இறுதி முடிவை மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.