முதல் மரியாதை திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் காதல் நாடக திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் கிராம பின்னணியை கொண்ட கதை அம்சம் ஆகும். இப்படத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் எழுதி இயக்கி தயாரித்துள்ளார்.
ஒரு மகிழ்ச்சியற்ற திருமணமான கிராம தலைவருக்கும் ஒரு இளம் படகு ஓட்டும் பெண்ணுக்கும் இடையே மலரும் காதலும் அவர்களின் உறவையும் சுற்றி முதல் மரியாதை பட கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா. இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி, சத்யராஜ், ஜனகராஜ், அருணா, வீராசாமி, புது முகங்கள் தீபன் மற்றும் ரஞ்சனி ஆகியோர் நடித்துள்ளனர்.

#image_title
முதல் மரியாதை திரைப்படத்தின் கதை ஜெயகாந்தனின் நாவலை தழுவி உருவானதாகும் ஜெயகாந்தன் எழுதிய சமூகம் என்பது நாலு பேர் என்ற நாவலில் அமைந்துள்ள ஒரு இறுக்கமான திருமணம் என்ற கதையை மையமாக வைத்து பாரதிராஜா உருவாக்கி இருக்கிறார்
இயக்குனர் பாரதிராஜா கிராமம் சார்ந்த படங்களை எடுப்பதில் வல்லவர் அதேபோல் இந்த முதல் மரியாதை படத்திலும் கிராமத்து வாழ்க்கையை நம் கண் முன்னே காட்டி இருப்பார். கிராமத்தில் நடக்கும் கண்மூடித்தனமான முட்டாள்தனமான வழக்கங்களால் ஒரு மகிழ்ச்சியற்ற திருமணத்தில் மாட்டிக் கொண்ட நாயகன் வயது கடந்து ஒரு காலகட்டத்தில் சந்திக்கும் இளம்பெண்ணை தன்னை அறியாமல் விரும்புகிறார் கிராம வழக்கம் மற்றும் சமூகத்தால் தனது ஆசையை மூடி மறைத்து அந்த பெண்ணுடன் சகஜமாக பழகுகிறார் இறுதியில் என்ன ஆகிறது என்பது மீதி கதை
படம் முழுவதும் சஸ்பென்சாக வைக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருப்பார். அது கிளைமாக்ஸ் இல் வெளிவரும். இந்தப் படத்தில் சத்யராஜை நடிக்க வைக்க மிகவும் மெனகெட்டோம் கஷ்டப்பட்டோம் என்று இப்படத்தின் உதவி இயக்குனர் சித்ரா லட்சுமணன் ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியது என்னவென்றால் இப்படத்தில் வடிவுக்கரசியின் கணவர் கதாபாத்திரத்தை சஸ்பென்ஸ் ஆக படம் முழுவதும் கொண்டு வந்திருப்போம். கிளைமாக்ஸ் வரும்போது அந்த கதாபாத்திரம் வெளிவரும். அந்த சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தில் சத்யராஜ் அவர்களை நடிக்க வைக்க பாரதிராஜா, நான் எல்லோரும் மிகவும் ஆசைப்பட்டோம். ஆனால் அதில் ஒரு பிரச்சனை இருந்தது

#image_title
அது என்னவென்றால் சத்யராஜ் அப்போது மிகவும் பிசியாக இருந்தார் பல படங்களில் கமிட் ஆகி இருந்தார் மாதம் 30 நாட்களும் அவருக்கு சூட்டிங் இருந்தது அப்போது நான் அவரை சந்தித்து முதல் மரியாதை படத்தில் நடிப்பதற்காக கேட்டு பார்ப்போம் என்று சத்யராஜிடம் கேட்டேன். அவருக்கும் பிடித்திருந்தது ஆனால் எனக்கு 30 நாளும் சூட்டிங் இருக்கிறது நான் என்ன செய்வது என்று யோசித்தார்.
அந்த நேரத்தில் நான் ஒரு ஐடியா செய்தேன். அந்த காலகட்டத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை சூட்டிங் நடைபெறாது என்று தென்னிந்திய நடிகர் தொழிலாளர் சம்மேளனம் ஒரு கட்டுப்பாடு வைத்திருந்தது. அதை நான் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். அதற்கு தகுந்தார் போல் பிளான் செய்தேன்.
அப்போது சத்யராஜ் மைசூரில் ஷூட்டிங்கில் இருந்தார் நான் அவரிடம் அந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பிளைட்டை பிடித்து சூட்டிங் வந்துடுங்க உங்கள் காட்சிகளை ஒரே நாளில் முடித்து விடுகிறோம் என்று கூறி அவரை வரவைத்தேன். பாரதிராஜா அவர்களிடம் ஒரே நாளில் சத்யராஜ் வரும் படக்காட்சிகளை படமாக்க எல்லா திட்டங்களையும் செய்ய சொன்னேன். நாங்கள் திட்டமிட்டது திட்டமிட்டது போல் எல்லாம் சரியாக நடந்தது. ஒரே நாளில் சத்யராஜை வைத்து ஷூட்டிங் முடித்து அவரை மைசூருக்கு அனுப்பி வைத்து விட்டோம். இதில் அவருக்கு மகிழ்ச்சி எங்களுக்கும் மகிழ்ச்சி. இதுதான் முதல் மரியாதை படத்தில் சத்யராஜ் நடித்ததற்கு பின்னால் இப்படி ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது என்று பகிர்ந்துள்ளார் சித்ரா லக்ஷ்மணன்.
