டெல்டா மாவட்டங்களில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருத்துறைப்பூண்டியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தஞ்சாவூர் – கோடியக்கரை சாலையில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசிய இபிஎஸ், ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல, அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களுக்கு கூட்டணி வேண்டுமென்றால் வேண்டும், வேண்டாம் என்றால் வேண்டாம், எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. ஸ்டாலினை போல வாரிசுக்காக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை.
மக்களுடைய விருப்பத்திற்காக மட்டுமே ஆட்சிக்கு வர நினைக்கிறோம். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என நினைப்பவர்கள் ஓரணியில் திரள வேண்டும். திமுக ஒரு ஊழல் கட்சி, ஊழல் அரசாங்கம், அதனை அகற்ற வேண்டும் என்று பாஜக கருதுகின்றது. அந்த நிலைப்பாட்டோடு எங்களுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. சரியான நேரத்தில் உங்களுக்கு மரண அடி கொடுப்போம். 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது தான் கனவு, ஆனால் நிஜத்தில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என இ பி எஸ் பேசியுள்ளார்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…