ரேஷன் கார்டு தொலைந்துவிட்டதா…? கவலை வேண்டாம்…! வீட்டிலிருந்தே டூப்ளிகேட் கார்டு வாங்குவது எப்படி…? முழு விவரம் இதோ…!!

Spread the love

அசல் ரேஷன் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, அதற்குப் பதிலாக புதிய நகல் குடும்ப அட்டையைப் பெறத் தமிழக அரசு எளிய வழிமுறைகளை வழங்கியுள்ளது. பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பிக்க விரும்பினால், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது தாலுகா அலுவலகங்களில் நடைபெறும் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம்களில் கலந்துகொண்டு மனு அளிக்கலாம். இந்த முகாம்களில் புதிய கார்டு கோருதல், பெயர் சேர்த்தல் அல்லது நீக்கம் போன்ற பணிகளையும் உடனுக்குடன் செய்துகொள்ள முடியும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வமான TNPDS இணையதளத்திற்குச் சென்று ‘நகல் குடும்ப அட்டை’ எனும் பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும். குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணைப் பயன்படுத்தி லாகின் செய்த பிறகு, தேவையான விபரங்களைப் பூர்த்தி செய்து 50 ரூபாய் கட்டணத்தை இணைய வழியிலேயே செலுத்தலாம். விண்ணப்பம் ஏற்கப்பட்டதும், புதிய நகல் ரேஷன் கார்டு அஞ்சல் துறையின் மூலம் நேரடியாக உங்கள் வீட்டு முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.

Devi Ramu

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

7 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

8 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

8 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

9 மணத்தியாலங்கள் ago