பெரும்பாலும் அனைத்து வீடுகளிலுமே பல்ல, கரப்பான் பூச்சி தொல்லை இருப்பது சாதாரணம்தான். இவற்றை எப்படி விரட்டினாலும் போகவில்லையே, விரட்டுவதற்கு வேறு வழி கிடையாதா ? என்று யோசிக்க வேண்டாம். இயற்கையாகவும், பாதுகாப்பாகவும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈசியாக அவற்றை விரட்டலாம். அதற்கு இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க. வெற்றிலை ஒன்று, பூண்டு இரண்டு பற்கள், வினிகர் சிறிதளவு, தண்ணீர் தேவையான அளவு, பயன்பாடற்ற மாத்திரைகள், பிஸ்கட் தூள் சிறிதளவு எடுத்துகொள்ள வேண்டும்.
ஒரு மிக்சியில் பூண்டை நன்றாக நசுக்க வேண்டும். அதில் வெற்றிலை சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடான நீர் சேர்க்க வேண்டும். வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும். இதை இரண்டு மணி நேரம் மூடி வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி ஸ்பிரே பாட்டிலில் நிரப்ப வேண்டும். கரப்பான் பூச்சி, பல்லி, எறும்பு அதிகம் காணப்படும் இடங்களில் தெளிக்க வேண்டும். இது ஒரு 100% இயற்கையான மற்றும் செலவில்லாத தீர்வு என்பதால் தாராளமாக பயன்படுத்தலாம்
