34 வயதில் திருமணம் செய்யப்போகும் அனிருத்.. மணப்பெண் இந்த பிரபலமா?.. ஜோடி சூப்பராக இருக்கே..!

By Nanthini on ஆனி 11, 2025

Spread the love

இன்று தமிழ் சினிமாவில் ராக்ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இசையமைப்பாளர் அனிருத். தனுஷின் 3 என்ற திரைப்படத்தின் மூலமாக முதன் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது தனுஷ் தான். முதல் படமே அனிருத்தை இந்த உலகிற்கு யார் என காட்டியது. அதிலிருந்து தொடர்ந்து தன்னுடைய துள்ளலான இசையால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கு இனி இவர்தான் இசை என்ற ஒரு சூழ்நிலையை அனிருத் உருவாக்கினார். அதுவரை பெரிய பெரிய முன்னணி நடிகர்களுக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வந்த நிலையில் அவரையே டேக் ஓவர் செய்து இன்று இந்திய சினிமாவில் போற்றத்தக்க வகையில் அனிருத் வளர்ந்து நிற்கின்றார்.

காவ்யா மாறனை கரம்பிடிக்கும் அனிருத்?

   

தமிழை தாண்டி மற்ற மொழி சினிமாக்களிலும் இவர் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். வெளிநாடு கச்சேரிகளையும் நடத்தி உலக அளவில் மிகவும் பாப்புலர் ஆகியுள்ளார்.இந்நிலையில்  இவருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை நிர்வாக அதிகாரியும் சன் குழுமத்தின் மகளான காவியா மாறனும் திருமணம் செய்ய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகின்றது. காவ்யா மாறன் தரப்பில் அனிருத்துக்கு வரதட்சணையாக சுமார் 2000 கோடி மதிப்பிலான சொத்துகள் வழங்கப்படலாம் என குறிப்பிடுகிறது.