கொலஸ்டிரால் என்ற வார்த்தை பயத்தைக் கொடுத்தாலும், அதில் நல்ல கொலஸ்டிரால் (HDL) மற்றும் இதய நோயை வரவழைக்கும் கெட்ட கொலஸ்டிரால் (LDL) மற்றும் ட்ரைகிளிசரைடுகள் என வகைகள் உள்ளன. கெட்ட கொலஸ்டிரால் அளவைக் கட்டுக்குள் வைக்க, அன்றாட உணவில் நாம் செய்யும் ஏழு தவறுகளைத் தவிர்ப்பது அவசியம்.
முதலாவதாக, நார்ச்சத்து உணவுகளைத் தவிர்க்க கூடாது. ஏனென்றால் ஓட்ஸ், பீன்ஸ், ஆப்பிள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் LDL கொலஸ்டிராலை உறிஞ்சும் வேலையைத் தடுக்க உதவுகின்றன. இரண்டாவதாக, வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
இவை டிரான்ஸ் கொழுப்புகளை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும். மூன்றாவதாக, மீதமுள்ள உணவை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவது. இவ்வாறு சமைத்த எண்ணெயை மீண்டும் சூடாக்கும்போது, அது ஆக்சிடைஸ்டு கொழுப்பாக மாறி இதயத் தமனிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
நான்காவதாக, சமையலில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்; இவற்றின் அளவைக் குறைப்பது LDL கொலஸ்டிராலைக் குறைக்க உதவும். ஐந்தாவதாக, உப்பும் சர்க்கரையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்வது. இது ட்ரைகிளிசரைடு மற்றும் கொலஸ்டிராலை அதிகரித்து உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆறாவதாக, ஆரோக்கியமான உணவுகளைக்கூட அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது (போர்ஷன் கண்ட்ரோல்) ட்ரைகிளிசரைடுகளை அதிகரிக்கும்.
இறுதியாக, சாஸ் மற்றும் டிரஸ்ஸிங் போன்ற பதப்படுத்தப்பட்ட பொருட்களை சாலட் அல்லது மற்ற உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிடுவது, மறைமுகமாகச் சர்க்கரை, சோடியம் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்பைக் கூட்டி LDL அளவை அதிகரிக்கும். இந்த ஏழு பழக்கங்களைத் தவிர்த்தால், உயர் கொலஸ்டிரால் மற்றும் அதனால் வரும் இதய நோய் ஆபத்துகளைத் தடுக்கலாம்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…