காலையிலேயே ஷாக்…. 1.21 கோடி பெண்களுக்கு தலா ரூ.10,000 லஞ்சம்… பரபரப்பை கிளப்பிவிட்ட செல்வப்பெருந்தகை ….!

Spread the love

பீகார் மாநிலத்தில் 1.21 கோடி பெண்களுக்கு 10,000 லஞ்சம் கொடுத்து தான் நிதீஷ் குமாரின் JDU – BJP கூட்டணி வெற்றி பெற்றது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பீகார் மாநிலத்தைப் போல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என சிலர் கூறி வருகிறார்கள். பீகார் மாநில தேர்தலை பொருத்தவரை அங்கு வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் காரணமாக 65 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதை எதிர்த்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களும் தேஜாஸ்ரீ யாதவ் அவர்களும் இணைந்து 16 நாட்கள் பீகாரில் வாகன அணிவகுப்பு மூலம் பரப்புரை மேற்கொண்டனர்.

இதன் பின்னணியில் பீகார் மாநிலத்தில் தொகுதி பங்கீடு செய்யப்பட்டு தேஜஸ்வி யாதவ் அவர்களை முதலமைச்சராக இந்தியா கூட்டணி சார்பாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் வெற்றி வாய்ப்புகள் நிச்சயமாக இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும் என நாடே எதிர்பார்த்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பீகார் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடையவில்லை, ஜனநாயகம் தோல்வி அடைந்து விட்டது. அங்கு 1.21 கோடி பெண்களுக்கு தலா 10,000 கொடுத்து பாஜக வென்றுள்ளது. தமிழக மக்களின் ஜிஎஸ்டி பணத்தை பாஜக பீகாரில் கொடுத்து விட்டதாகவும் செல்வ பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். இந்த தேர்தலில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

“அண்ணே… 16 வருசமா உன்னை எங்கெங்கோ தேடுனேன்…” ராக்கி கட்டச் சென்ற தங்கைக்கு… சாலையோரத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

ரக்ஷா பந்தன் திருநாளன்று, ஒரு பெண் தன் உடன்பிறவா சகோதரனுக்கு ராக்கி கட்டுவதற்காக மிகுந்த உற்சாகத்துடன் நடந்து சென்றுகொண்டிருந்தாள். வழியில்…

11 minutes ago

2029-ல் விஜய்க்கு பிரதமர் நாற்காலியா?…. உண்மையைப் போட்டு உடைத்த காங்கிரஸ் எம்பி… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

தமிழக அரசியலில் சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் எதிர்கால பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.…

13 minutes ago

ஐயோ பாவம்… அண்ணனுக்கு ராக்கி கயிறு கட்ட வந்த தங்கச்சி… கார் மோதி பரிதாப பலி… ரக்ஷா பந்தன் இரவில் நேர்ந்த கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக லலித்பூரிலிருந்து குஷிபுராவில் உள்ள தனது தாய்வழி வீட்டிற்கு 24 வயதான பாலக் வந்துசேர்ந்தார். திங்கட்கிழமை…

14 minutes ago

‘அப்பாவைக் காணோம்’…. சட்டமன்ற பதிலடிக்கு சேலத்தில் வைத்து விஜய்க்கு விடுக்கப்பட்ட ‘ரீல்ஸ்’ சவால்… விஜய்யை கலாய்க்க போய் திமுக சிக்கிய ஆப்பு….!

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் விஜய்யின் தவெக வருகையும் அவர் எழுப்பும் கேள்விகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.…

17 minutes ago

“நிதி உதவி தர்றோம்”…. முதல்வர் விஜய் பெயரில் பரவும் வாட்ஸ்அப் மெசேஜ்… நம்பினால் பேராபத்து…. தமிழக மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை….!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேசுவது போல ஏஐ (AI) மற்றும் டீப் ஃபேக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள்…

23 minutes ago

ஐயோ கடவுளே… கைலாச மானசரோவர் யாத்திரை சென்ற… ஹைதராபாத் குடும்பம் வெள்ளப்பெருக்கில் மாயம்… 5 நாட்களாகத் தொடரும் அதிர்ச்சி…!!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கைலாச மானசரோவர் யாத்திரை சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் அவாரி, அவரது மனைவி…

25 minutes ago