“என்னை விட்ருடா.. ப்ளீஸ்!”… பட்டப்பகலில் கடத்தல்… கதறிய இளம்பெண்… லாட்ஜில் நடந்த கொடூரம்… வீடியோ எடுத்த கொடூரன்… வைரலாகும் நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

Spread the love

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், ‘ஜீவிகா’ மகளிர் குழுவில் பணியாற்றும் இளம்பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கடன் வசூல் பணிக்காக வெளியே சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த விக்ரம் குமார் என்ற பக்கத்து வீட்டுக்காரர், அப்பெண்ணை வலுக்கட்டாயமாக தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி ‘ப்ளூ டைமண்ட்’ என்ற தங்கும் விடுதிக்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு ரோஹித் சர்மா என்பவரிடம் அந்தப் பெண்ணை ஒப்படைத்துவிட்டு விக்ரம் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

விடுதி அறையில் அடைக்கப்பட்ட அப்பெண்ணை ரோஹித் சர்மா கடுமையாகத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், தன்னை விட்டுவிடும்படி அந்தப் பெண் கதறித் துடிக்கும் நெஞ்சை பதறவைக்கும் காட்சிகளை வீடியோவாகப் பதிவு செய்த அந்த நபர், அதனை சமூக வலைத்தளங்களிலும் கசியவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூரத் தாக்குதலில் இருந்து தப்பித்து விடுதியில் உள்ள வேறு ஒரு அறைக்குச் சென்ற அந்தப் பெண், தனது பெற்றோருக்கு ரகசியமாகத் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக அங்கு வந்த அவர்கள் தங்கள் மகளை மீட்டுச் சென்றனர். இணையத்தில் பரவிய வீடியோவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று செப்டம்பர் 28 அன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Gayathri

Recent Posts

அம்மாடியோ… இந்த காலத்துல இப்படி ஒரு மருமகளா?… நடக்க முடியாத மாமனாரைத் தோளில் சுமந்து சென்ற பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…

8 மணத்தியாலங்கள் ago

இது பள்ளியா?… இல்ல சித்திரவதைக் கூடமா?… 3 வயது பிஞ்சுக் குழந்தையை… கயிற்றால் கட்டித் தாக்கிய ஆசிரியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…

8 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… உயிருள்ள பாம்பைக் கழுத்தில் சுற்றி சாகசம்… பூஜையின் போது கடித்ததில் பிரபல… பாம்பு பிடிப்பவர் பரிதாப பலி…!

மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…

8 மணத்தியாலங்கள் ago

பலமுறை நடந்த கொடூரம்… வெளிவந்த உண்மை… சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்… நீதிமன்றம் எடுத்த முடிவு என்ன தெரியுமா?…!!

ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…

8 மணத்தியாலங்கள் ago

என் கணவனுடனா பழகுகிறாய்?… உன்னை உயிரோடு விடமாட்டேன்… ரூ 13 லட்சம் கூலிப்படையை ஏவி… தோழியைத் தீர்த்துக்கட்டிய மனைவியின் வெறிச்செயல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…

8 மணத்தியாலங்கள் ago

கடவுளே… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?… வீட்டு வாசல் சாக்கடைக்குள் விழுந்த வியாபாரி… காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…

8 மணத்தியாலங்கள் ago