இன்றைய காலகட்டத்தில் இணையம் பலரையும் பிரபலமாகிவிட்டது. அதில் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்களில் திவாகர் என்பவரும் ஒருவர். மனநல மருத்துவரான இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் இருப்பதால் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரீல்ஸ் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார். இது பலருடைய கவனத்தை ஈர்த்ததால் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியுள்ளார். வாட்டர் மெலன் திவாகர் என இவருக்கு புனைப்பெயர் எல்லாம் இணையவாசிகள் வைத்துள்ளனர். இவர் பெரிய பெரிய ஸ்டாருகளுக்கு பெயர் வாங்கி கொடுத்த அல்லது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற காட்சிகளை ரிலீஸ் செய்து பதிவிட்டு வருகின்றார்.

இவருக்கு வாட்டர் மெலன் திவாகர் என்று பெயர் வருவதற்கு காரணமே கஜினி படத்தில் சூர்யா சீனுடன் இணைந்து தர்பூசணி சாப்பிடும் காட்சியை ரீல்சாக பதிவிட்டு பகிர்ந்ததில் பிரபலமானார். இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 2.36 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் உள்ளனர். இவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் அவருக்கு நடிப்பு அரக்கன் என்றும் பெயர் சூட்டினார்கள். இப்படியான நிலையில் அஜித்தின் குட் பேட் அக்லி படக் காட்சியை ரீல்ஸ் செய்து பகிர்ந்துள்ளார்.

அதாவது அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாகி உள்ள குட் பேட் அட்லி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இந்தத் திரைப்படம் வருகின்ற பத்தாம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் டீசரில் இருந்து சில காட்சிகளை குறிப்பாக அஜித்குமார் பேசிய வசனங்களை மட்டும் வெட்டி இணைத்து அதனை ஒரு வீடியோவாக திவாகர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர இதனை பார்த்து ரசிகர்கள் இது என்னடா அஜித்துக்கு வந்த சோதனை என கலாய்த்து வருகிறார்கள்.
we got ganesh 2.O before gta 6🔥🔥🔥 https://t.co/XKKCViMGEv pic.twitter.com/Lc79E2vsmR
— U F (@UF_Offl) April 4, 2025
