“ஏம்மா… டான்ஸ் பிராக்டீஸ் பண்ற இடமா இது…? ஸ்பிரிங்க்லர் உடைந்ததால் வீட்டிற்குள் கொட்டிய தண்ணீர்…. பதற்றத்தில் நாயை காப்பாற்றிய பெண்… வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஆடி 17, 2026

Spread the love

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஆஷா கில்பர்ட் என்ற நடனக் கலைஞர், தனது வீட்டில் கம்பத்தைப் பயன்படுத்தி நடனப் பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த கம்பம் திடீரென நிலைதடுமாறி கழன்று விழுந்து, அங்கிருந்த தீயணைப்புத் தானியங்கி நீர் தெளிப்பானை பலமாகத் தாக்கியுள்ளது. இதனால் அந்தத் தெளிப்பான் உடனடியாகச் செயல்பட்டு, வீடு முழுவதும் அதிவேகத்தில் தண்ணீரை வாரி இறைக்கத் தொடங்கியதால், கண் இமைக்கும் நேரத்திற்குள் அவரது வீடு முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.

தண்ணீர் பீறிட்டு அடித்ததில் அவரும் அவரது செல்ல நாயும் முழுமையாக நனைந்ததோடு, அங்கிருந்த மின்சாதனப் பொருட்கள் மற்றும் வீட்டின் தரைத்தளமும் நீரில் மூழ்கின. இதனால் அதிர்ச்சியடைந்த ஆஷா, உடனடியாகச் செயல்பட்டுத் தனது செல்லப் பிராணியைப் பத்திரமாக மீட்டதுடன், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்து அவர்கள் விரைந்து வந்து நீர்க் கசிவை நிறுத்தினர். முறையற்ற முறையில் கூரைகளில் பொருத்தப்படும் உடற்பயிற்சிக் கருவிகள் எவ்வாறு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ள இச்சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.