“அதிமுக ஜெயித்ததே எங்க பிச்சைதான்”…. மேடையிலேயே கொளுத்திப்போட்ட பாமக திலகபாமா… தமிழக அரசியலில் அடுத்த பூகம்பம்…!

By Nanthini on ஆடி 17, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளின் கூட்டணிகளை வீழ்த்தி, தவெக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம் தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியாக உருவெடுத்துள்ள தவெக தலைமையில் புதிய கூட்டணிகள் மற்றும் அரசியல் சமன்பாடுகள் உருவாகும் சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. இந்த புதிய அரசியல் களத்தில், மாநிலத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் தங்களின் அடுத்தக்கட்ட நகர்வுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக, பாட்டாளி மக்கள் கட்சி ஆளுங்கட்சியான தவெகவுடன் மிகவும் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தவெக தலைவர் விஜய்யை வெகுவாகப் பாராட்டியுள்ளார். தேர்தலுக்கு முன்பு பாமகவிற்குள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கிடையே நிலவி வந்த அதிகாரப் போட்டியும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் சமாதானமாகிவிட்ட நிலையில், ராமதாஸின் ஆதரவாளர்களுக்கும் கட்சியில் பதவிகளை வழங்க அன்புமணி திட்டமிட்டு வருகிறார். மேலும், ஒரு பலமான புதிய கூட்டணியின் மூலம் பாமகவை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டு செல்லும் முனைப்போடு தவெகவை நோக்கி அவர் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.

   

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற பாமகவின் 38-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி பேசிய கருத்துகள் பெரும் பேசுபொருளாகியுள்ளன. இக்கூட்டத்தில் பேசிய பாமகவின் மாநிலப் பொருளாளர் திலகபாமா, “சட்டமன்றத் தேர்தலில் பாமக 4 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறவில்லை; அதிமுக நமது தயவால்தான் நின்றது. எனவே, அதிமுக வென்ற 34 தொகுதிகளையும் சேர்த்து, பாமக மொத்தம் 38 தொகுதிகளில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது” என்று பகிரங்கமாகக் குறிப்பிட்டார்.

   

மேலும் அவர் கூறுகையில், “எந்தவொரு அரசியல் அலைக்கும், சுனாமிக்கும் அசராமல் பாமக தொண்டர்கள் உறுதியாக நின்றனர். மற்ற கட்சித் தொண்டர்கள் தங்களது தலைவர்கள் சொல்வதைக் கூட கேட்காத நிலையில், பாமகவின் கடைக்கோடி தொண்டன் வரை தலைவரின் கட்டளையை ஏற்று வாக்களித்துள்ளார் என்பதை இந்தத் தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது” என்று பெருமிதத்துடன் கூறினார். அன்புமணி ராமதாஸ் தவெகவைப் பாராட்டிய அதே மேடையில், அதிமுக தங்களின் தயவால்தான் வென்றது என்று திலகபாமா விமர்சித்துப் பேசியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.