பழிவாங்கும் ஆத்திரம்…! “சாக்லேட் ஆசை காட்டி கடத்தப்பட்ட 5 வயது சிறுமி… ” கை, கால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்பு… குற்றவாளியை தட்டி தூக்கிய போலீசார்… அதிரடி நடவடிக்கை…!!

By Devi Ramu on ஐப்பசி 14, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் மல்காஜ்கிரி மாவட்டம் பொள்ளாராம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வேளாண் துறை ஆராய்ச்சியாளர் பெர்னாண்டஸ் என்பவரின் 5 வயது மகள் ஆரேலியா, வடமாநில முன்னாள் காவலாளியால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகப் பணியாற்றி, ஒழுங்கீனம் காரணமாக வேலையை விட்டு நீக்கப்பட்ட பீகாரைச் சேர்ந்த விக்ரம் குமார் என்பவர் இந்த கொடூரத்தைச் செய்துள்ளார். வேலையை விட்டு நீக்கிய ஆத்திரத்தில் இருந்த விக்ரம் குமார், சனிக்கிழமை இரவு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்குச் சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை காட்டி அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் சிறுமியை மிருகத்தனமாகக் கொன்று, உடலின் கை, கால்களைக் கல்லால் கட்டித் திறந்தநிலைத் தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளார்.

   

இதன் பிறகு, மற்றொரு காவலாளியின் போன் மூலம் சிறுமியின் தந்தையைத் தொடர்புகொண்டு ஹிந்தியில் பேசுபவன் போல நடித்து ரூ.20 லட்சம் பணம் கேட்டுள்ளான். புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் எண்களை வைத்து விக்ரம் குமாரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பழிவாங்கும் நோக்கில் பிஞ்சுச் சிறுமி கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.