Sheffield shield தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வரும் நிலையில் நியூ சவுத் வெல்ஸ் மற்றும் விக்டோரியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கடந்த பத்தாம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற விக்டோரியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்த அணி 382 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் தொடர்ந்து களம் இறங்கிய நியூ சவுத் வெல்ஸ் 128 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய விக்டோரியா அணி ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதனால் நியூ சவுத் வெல்ஸ் அணிக்கு 425 ரன்கள் வெற்று இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விளையாடிய சவுத் வெல்ஸ் அணி 125 ரன்கள் ஆல் அவுட் ஆனது. விக்டோரியா அணி 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் வேல்ஸ் அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் 117 ரன்கள் எடுத்திருந்தபோது நாதன் லயன் பந்துவீச்சை பேட்டரி பெர்கஸ் ஓ நீல் கட் ஷாட் அடிக்க முயற்சி செய்வார். அது அவருடைய பேட்டின் நுனியில் பட்டு சிலிப் திசையில் சென்றது. வேகமாகவும் சற்று விலகியும் வந்த பந்தை ஸ்மித் அசால்ட் ஆக பிடித்து அசத்தினார். அவர் சிலிப் திசையில் பல அற்புதமான கேட்ச்கள் பிடித்தாலும் இந்த கேட்ச் மிரட்டலாக இருந்தது. இதனைப் பார்த்த பேட்டர் அதிர்ச்சி அடைந்து கீழே விழுவது போல ரியாக்சன் கொடுப்பார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Steve Smith that is RIDICULOUS 🤯 #SheffieldShield pic.twitter.com/M87dUvNLCU
— cricket.com.au (@cricketcomau) November 12, 2025
