ஓடும் ரயிலின் ஸ்லீப்பர் கோச் பெட்டிக்குள் இருக்கைகளுக்கு நடுவே வாலிபர் ஒருவர் வாளியில் தண்ணீர் எடுத்து குளிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சியை சேர்ந்த பிரமோத் ஸ்ரீவாஷ் என்ற அந்த வாலிபர் சமூக வலைத்தளத்தில் பிரபலமடைவதற்காக இந்த ரீல்ஸ் வீடியோவை படம் எடுத்து பதிவேற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. குளிக்கும்போது சோப்பு மற்றும் ஷாம்பு பயன்படுத்தும் காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
இது அநாகரிகமான செயல் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலருடைய விமர்சனத்தையும் பெற்றுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வரம்புகளை மீறி செயல்பட்டதாக கூறி அந்த வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் புகழடைய வேண்டும் என்பதற்காக விதிமுறைகளை இப்படி மீறக் கூடாது என்றும் இது போன்ற செயல்களில் இனி ஈடுபடக்கூடாது என்றும் அதிகாரிகள் அவரை எச்சரித்துள்ளனர்.
