இனி PF பணம் எடுக்க சிரமப்பட வேண்டாம்?.. வீட்டில் இருந்து கொண்டே எளிதில் வேலையை முடித்து விடலாம்.. இதோ எளிய வழி..!

Spread the love

தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய நபர்களுக்கு பி எப் பணம் என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் அவர்கள் வாங்கும் சம்பளத்தில் ஒரு சிறு தொகை தனியாக சேமிக்கப்படுகின்றது. அதே அளவு பங்களிப்பு நிறுவனத்தாலும் வழங்கப்படுகின்றது. PF பணத்திற்கு வட்டி வருமானமும் கிடைக்கின்றது. இப்படியான நிலையில் பிஎப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க நீங்கள் அலுவலகத்திற்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை.

அதற்கு பதில் மத்திய அரசின் உமாங் செயலி மூலம் உங்களுடைய pf பணத்தை எளிதில் எடுத்துக் கொள்ள முடியும். பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் வசதிக்காக மத்திய அரசு இந்த செயலியை செயல்படுத்தி வருகின்றது. அட்வான்ஸ் தொகை மற்றும் ஓய்வூதிய உரிமைகளையும் ஆன்லைன் மூலம் நிர்வகிக்க முடியும். உமாங் செயலியை தங்களுடைய மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலமாக pf உறுப்பினர்கள் வீட்டில் இருந்து கொண்டே பி எப் தொடர்பான பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும்.

  1. முதலில் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து உமாங் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  2. பிறகு செயலியை திறந்து ஆதார் எண் மற்றும் கடவுச்சொல்லை பதிவிட்டு உள்ளே நுழைந்த பிறகு பட்டியலில் இருந்து EPFO சேவையை தேர்வு செய்ய வேண்டும்.
  3. பின்னர் Rise Claim விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  4. தற்போது உங்களுடைய UAN நம்பர் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி நம்பரையும் பதிவிட வேண்டும்.
  5. நீங்கள் எடுக்க விரும்பும் வகையை தேர்ந்தெடுத்த தேவையான விவரங்களை பூர்த்தி செய்து உங்களுடைய கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
  6. அதன் பிறகு உடனே உங்கள் கோரிக்கைக்கான ஒப்புகை எண் கிடைக்கும். இந்த எண்ணின் உதவியுடன் உங்கள் உரிமை கோரல் நிலையை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
  7. இவ்வாறாக உங்களுடைய pf பணத்தை வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக நீங்கள் எளிதில் எடுத்துக் கொள்ள முடியும்.
Nanthini

Recent Posts

BIG BREAKING: விஜய் முதல்வராவதில் சிக்கல்..? அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்…!!

தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின்…

9 minutes ago

சென்னை முதல் கன்னியாகுமரி வரை.. தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கனமழை அலர்ட் – லிஸ்டில் உங்க ஊர் இருக்கா..?

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கிய நாள் முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு 7 மணி…

9 minutes ago

எம்.எல்.ஏ ஆனதும் இப்படியா..? கையில் பீர் பாட்டிலுடன் ஆட்டம் போடும் தவெக MLA … வைரலாகும் பகீர் வீடியோ…!!

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் சரவணன், கையில் பீர் பாட்டிலுடன்…

21 minutes ago

“ஒரே நாளில் இரட்டை கொண்டாட்டம்” விஜய்யின் வெற்றியையும் த்ரிஷாவின் பிறந்தநாளையும் முடிச்சுப் போட்ட பிரபலங்கள்..!!

நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளை மே 4-ம் தேதி கொண்டாடினார். அதே நாளில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்'…

26 minutes ago

இபிஎஸ்-க்கு கெடு விதிக்கும் சி.வி.சண்முகம்..? அதிமுக-வில் உச்சகட்ட பரபரப்பு.. தவெக கூட்டணியால் அதிரும் அரசியல் களம்..!!

தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழலில், அதிமுக-வின் மூத்த தலைவர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர்…

28 minutes ago

தலைவர்கள் சிலைக்கு அவமதிப்பா..? பேரறிஞர் அண்ணா கையில் தவெக கொடியை திணித்த தொண்டர்கள்.. கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது, தமிழக வெற்றிக் கழகத்தினர் பேரறிஞர் அண்ணாவின் சிலையின் கையில் தங்கள் கட்சியின்…

31 minutes ago