இப்போதாவது நாம் எழுந்து நிற்க மாட்டோமா?… ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் கிஷோர்…!

Spread the love

2024 தேர்தலில் பாஜகவுடன் தேர்தல் ஆணையமும் சேர்ந்து வாக்குத்திருட்டுகளில்  ஈடுபட்டிருந்தது. நேற்று தேர்தல் ஆணைய தரவுகளை காண்பித்து செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.  கர்நாடகாவில் மகாதேவபுரத் தொகுதியில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள், மகாராஷ்டிராவில் குறுகிய காலத்தில் 1 கோடி வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர், உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் பல வாக்காளர்கள், புகைப்படம் இல்லாத வாக்காளர்கள் படிவம், 6 முறைகேடு உள்ளிட்ட ஐந்து வழிகளில் மோசடி நடந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். வீடியோ ஆதாரங்களையும் அளித்துள்ளது, வாக்காளர் பட்டியல் மிகப்பெரிய மோசடியை தேர்தல் ஆணையம் செய்துள்ளது, எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இருப்பது ஏன்? எதிர்க்கட்சிகளை மிரட்டுவது, பாஜகவின் ஏஜெண்டை போல தேர்தல் ஆணையத்தில் செயல்படுவது. இதுபோன்ற பல திருட்டுகளில் பாஜகவும், சட்டமன்றத் தேர்தல் ஆணையமும் ஈடுபடுவது ஏன் என கேள்வி எழுப்பிவுள்ளார்.

ராகுல் காந்தி பேச்சுக்கு கிஷோர் ஆதரவு தெரிவித்து வெளியிட்ட பதிவில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அனைத்து இந்தியர்களின் சார்பாகவும் வணக்கம். ராகுல் காந்தி அவர்கள் சில பயங்கரமான விஷயங்களை  அம்பலப்படுத்து உள்ளார். இதில் அனைவரும் கண்விழித்து கொள்ளாவிட்டால் படுகுழியில் தள்ளப்படுவோம். டிஜிட்டல் தரவு மற்றும் சிசிடிவி காட்சிகளை வழங்காத தேர்தல் ஆணையம், ஜனநாயகத்தின் அடித்தளத்தை அழித்த மிகப்பெரிய துரோகத்தை, நிரூபித்த தன் கணக்கில் நடக்கும் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு என் வணக்கம்.

இப்போதாவது நாம் கண்விழிக்கவில்லை என்றால் நமக்கான உரிமை தனம் படுகொலை செய்யப்படும். இப்போதாவது நாம் எழுந்து நிற்க வேண்டும், இப்போதாவது விசாரணை நடக்குமா? துணை ஜனாதிபதி போன்ற உயர்ந்த பதவிகளை ராஜினாமா  செய்வது போலவும் தேர்தல் பத்திரங்களைப் போன்ற அரசியலமைப்பிற்கு முரணான ஒரு மோசடி போலவும். இறந்த பொருளாதாரம் எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் நாம் நிச்சயமாக இறந்த ஜனநாயகத்தில் வாழ்கிறோம். இந்திய மக்கள் ஊடகங்கள், நீதிமன்றம், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இந்த துரோகத்தின் எதிராக நிற்காவிட்டால் நம் வாக்குரிமையை முற்றிலும் பறிக்கப்படுவதை விரைவில் காண்போம் என தெரிவித்துள்ளார்,நடிகர் கிஷோர் .

 

Divyamayakannan

Share
Published by
Divyamayakannan

Recent Posts

சட்டத்தைக் கையில் எடுக்க நீங்க யார்?… பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… வைரல் வீடியோவால் சிவசேனா… மகளிர் பிரிவினர் மீது வெடித்த சர்ச்சை…!

தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…

56 minutes ago

அதிர்ச்சி… நான் கலெக்டரா இருந்திருந்தா அங்கேயே என்கவுன்ட்டர்… அனல் பறக்கும் ஜெயக்குமாரின் பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி அள்ளிய ஆந்திரா… தமிழகத்தின் வாய்ப்புகள் கைநழுவியதா?… டி.ஆர்.பி. ராஜா விளாசல்…!

ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…

1 மணத்தியாலம் ago

திக்.. திக்..! “பாம்பா? எனக்கென்ன பயம்!”… 15 அடி மலைப்பாம்பை வெறும் கையால் அசால்ட்டாக தூக்கிய சிங்கப்பெண்… மிரண்டு போன பொதுமக்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… பைக் டாக்ஸி புக் செய்யும் பெண்கள் உஷார்… எல்லை மீறிய ரேபிடோ ஓட்டுநரின்… வக்கிரப் பேச்சை அம்பலப்படுத்திய இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

அங்க தான் போனாங்க… சம்பளம் வாங்க சென்ற இடத்தில் மர்மம்… 7 வயது மகளுடன் மாயமான தாய்… தேடி தேடி ஓய்ந்து போன கணவர்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago