2024 தேர்தலில் பாஜகவுடன் தேர்தல் ஆணையமும் சேர்ந்து வாக்குத்திருட்டுகளில் ஈடுபட்டிருந்தது. நேற்று தேர்தல் ஆணைய தரவுகளை காண்பித்து செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். கர்நாடகாவில் மகாதேவபுரத் தொகுதியில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள், மகாராஷ்டிராவில் குறுகிய காலத்தில் 1 கோடி வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர், உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் பல வாக்காளர்கள், புகைப்படம் இல்லாத வாக்காளர்கள் படிவம், 6 முறைகேடு உள்ளிட்ட ஐந்து வழிகளில் மோசடி நடந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். வீடியோ ஆதாரங்களையும் அளித்துள்ளது, வாக்காளர் பட்டியல் மிகப்பெரிய மோசடியை தேர்தல் ஆணையம் செய்துள்ளது, எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இருப்பது ஏன்? எதிர்க்கட்சிகளை மிரட்டுவது, பாஜகவின் ஏஜெண்டை போல தேர்தல் ஆணையத்தில் செயல்படுவது. இதுபோன்ற பல திருட்டுகளில் பாஜகவும், சட்டமன்றத் தேர்தல் ஆணையமும் ஈடுபடுவது ஏன் என கேள்வி எழுப்பிவுள்ளார்.
ராகுல் காந்தி பேச்சுக்கு கிஷோர் ஆதரவு தெரிவித்து வெளியிட்ட பதிவில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அனைத்து இந்தியர்களின் சார்பாகவும் வணக்கம். ராகுல் காந்தி அவர்கள் சில பயங்கரமான விஷயங்களை அம்பலப்படுத்து உள்ளார். இதில் அனைவரும் கண்விழித்து கொள்ளாவிட்டால் படுகுழியில் தள்ளப்படுவோம். டிஜிட்டல் தரவு மற்றும் சிசிடிவி காட்சிகளை வழங்காத தேர்தல் ஆணையம், ஜனநாயகத்தின் அடித்தளத்தை அழித்த மிகப்பெரிய துரோகத்தை, நிரூபித்த தன் கணக்கில் நடக்கும் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு என் வணக்கம்.
இப்போதாவது நாம் கண்விழிக்கவில்லை என்றால் நமக்கான உரிமை தனம் படுகொலை செய்யப்படும். இப்போதாவது நாம் எழுந்து நிற்க வேண்டும், இப்போதாவது விசாரணை நடக்குமா? துணை ஜனாதிபதி போன்ற உயர்ந்த பதவிகளை ராஜினாமா செய்வது போலவும் தேர்தல் பத்திரங்களைப் போன்ற அரசியலமைப்பிற்கு முரணான ஒரு மோசடி போலவும். இறந்த பொருளாதாரம் எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் நாம் நிச்சயமாக இறந்த ஜனநாயகத்தில் வாழ்கிறோம். இந்திய மக்கள் ஊடகங்கள், நீதிமன்றம், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இந்த துரோகத்தின் எதிராக நிற்காவிட்டால் நம் வாக்குரிமையை முற்றிலும் பறிக்கப்படுவதை விரைவில் காண்போம் என தெரிவித்துள்ளார்,நடிகர் கிஷோர் .
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
