திரையுலகை பொருத்தவரையில் வதந்திகள் என்பது சகஜம்தான். முன்னணி நடிகர் நடிகைகளுக்கு இடையே காதல் இருப்பதாக அடிக்கடி வதந்திகள் பரவுவது வழக்கம். அதன்படி சமீப காலமாக தனுஷ் மற்றும் மிருனா தாக்கூர் இடையே காதல் இருப்பதாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் இருவரும் பார்ட்டியில் ஒன்றாக இருக்கும் வீடியோக்களும் தனுஷின் காதல் பாடல்களுக்கு அவர் வைப் செய்யும் வீடியோக்களும் பரவியது. தனுஷ் பான் இந்திய அளவில் பிசியான நடிகராக இருக்கும் நிலையில் சேகர் கமுலா இயக்கத்தில் அவர் நடித்த குபேரா திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது.
அடுத்ததாக இட்லி கடை திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் தனுஷ் சிக்கி வருகின்றார். சமீபத்தில் தான் இவருக்கும் இவருடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிக்கும் விவாகரத்து ஆனது. இப்படியான நிலையில் தனுஷ் நடிகையுடன் டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவியது. சீதாராமன் திரைப்படம் மூலம் பிரபலமான மிருணாள் தாக்கூருடன் தனுஷ் டேட்டிங்கில் இருப்பதாக பல செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அந்த வதந்திகளுக்கு மிருணாள் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், தனுஷ் எனக்கு ஒரு நல்ல நண்பர் மட்டுமே. சமீபத்தில் எங்கள் இருவருக்கும் இடையேயான வதந்திகள் பரவியது எனக்கு தெரியும். அதைப் பார்க்கும்போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. சன் ஆப் சர்தார் 2 நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டது குறித்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவருக்கும் அஜய் தேவகனுக்கும் நல்ல நட்பு. அவர் அழைத்ததாம் தனுஷ் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக எங்களை இணைத்து இப்படி பேச வேண்டாம் என்று மிருணாள் தாக்கூர் விளக்கமளித்துள்ளார். இதைத் தொடர்ந்து இருவரின் காதல் வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
