BREAKING: மதுராந்தகத்தில் பதற்றம்…. வாக்குப்பதிவு திடீர் நிறுத்தம்…. சற்றுமுன் பரபரப்பு….!

By Nanthini on ஐப்பசி 6, 2026

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தண்டரை புதுச்சேரி பகுதியிலுள்ள வாக்குச்சாவடி எண் 55-ல், வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்திற்கு நேராகக் கறுப்பு மை வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் முகவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

வாக்காளர்களுக்குத் திட்டமிட்டே இந்த அடையாளம் வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், முகவர்களின் வாக்குவாதத்தைத் தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் அங்கு வாக்குப்பதிவை உடனடியாக நிறுத்தி வைத்து நிலமையை ஆய்வு செய்து வருகின்றனர்.