அய்யய்யோ… என்ன இது… ஆர்டர் செய்யாத பார்சலுக்கு ரூ 1,299 கட்டணம்?… திறந்து பார்த்த குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி… இணையத்தில் வீடியோ வைரல்…!!

By Swetha on ஐப்பசி 6, 2026

Spread the love

எழுத்தாளரான கிரண் மன்ரால் என்பவர், தான் ஆர்டர் செய்யாத ஒரு பார்சல் டெல்லிவரி கூரியர் நிறுவனம் மூலம் தனது வீட்டிற்கு வந்ததாகக் கூறியுள்ளார். அந்தப் பார்சலில் அவருடைய பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவை சரியாக அச்சிடப்பட்டிருந்தன. வீட்டில் இருந்த அவரது மகன், அது உண்மையான ஆர்டர் தான் என நம்பி ரூ 1,299 ரொக்கம் கொடுத்து பார்சலைப் பெற்றுக்கொண்டார்.

பார்சலைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் பாதியளவு கிழிந்த, பயன்பாட்டில் இருந்த பழைய குர்தா ஒன்று மட்டுமே இருந்தது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். மேலும், அந்த பார்சலை அனுப்பியவர் யார் என்ற முகவரியோ அல்லது விவரங்களோ அதில் குறிப்பிடப்படவில்லை. இது திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு நுட்பமான ‘கேஷ் ஆன் டெலிவரி’ ஆன்லைன் மோசடி என்று அவர் குற்றம் சாட்டினார்.

   

தனக்கு நேர்ந்த இந்த அனுபவத்தையும் பார்சலின் புகைப்படங்களையும் அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். தனது தனிப்பட்ட விவரங்கள் மோசடி செய்பவர்களுக்கு எவ்வாறு கிடைத்தன என்றும், இதுபோன்ற போலி பார்சல்களைக் கொடுத்து எத்தனை பேர் ஏமாற்றப்படுகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, ‘டெல்லிவரி’ நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம் அந்தப் பதிவிற்குப் பதிலளித்து, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாகத் தெரிவித்துள்ளது.