BREAKING: “தவெக-விற்கு ஓட்டு போடுங்க”…. தேர்தல் அலுவலர் செய்த காரியம்….. வாக்குப்பதிவு நிறுத்தம்…. அடுத்த பரபரப்பு….!

By Nanthini on ஐப்பசி 6, 2026

Spread the love

தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில், தேர்தல் அலுவலர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்களிடம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்குமாறு தேர்தல் அலுவலர் வற்புறுத்தியதாகக் கூறி, பிற அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த மோதல் மற்றும் குழப்பமான சூழ்நிலையைத் தொடர்ந்து, அப்போலிங் பூத்தில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுராந்தகத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியிலும் இதேபோன்று வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தாராபுரத்தில் நடந்துள்ள இச்சம்பவம் தேர்தல் களத்தில் கூடுதல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.