மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டம் தொம்பீவ்லியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில், தெரு நாய் ஒன்று கொடூரமாகத் தாக்கப்பட்டுப் பின்னர் தூக்கிலிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, உள்ளூர் மக்களிடையேயும் விலங்கு நல ஆர்வலர்களிடையேயும் கடுமையான கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மன்பாடா காவல் நிலையப் போலிஸார், குடியிருப்பு வளாகப் பாதுகாப்பு ஊழியர் உட்பட மூன்று பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
