வோடபோன் ஐடியா அதன் மிக பிரபலமான திட்டங்களில் ஒன்றான 249 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை நீக்கி உள்ளது. இந்த திட்டமானது இப்போது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இந்த திட்டம் 1 ஜிபி தினசரி டேட்டாவுடன் வந்தது. இந்த திட்டம் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலோடு வழங்குகிறது. இந்த திட்டம் நீக்கப்பட்ட போதிலும் வோடாபோன் ஐடியா இன்னும் 239 திட்டத்தை வழங்குகிறது.
இது இன்னும் ஒரு நல்ல சலுகை. இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி, ஜியோ ஹாட்ஸ்டார், மொபைல் அன்லிமிடெட் கால்ஸ், 300 sms ஆகியவற்றோடு வருகிறது. 1.5 ஜிபி அல்லது அதற்கும் மேற்பட்ட தினசரி டேட்டாவை வழங்கும் அதிக விலை திட்டங்களோடு ரீசார்ஜ் செய்ய பயனர்களை தூண்டுவதற்காக வோடபோன் ஐடியா இந்த திட்டத்தை நீக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
