“அன்றே கணித்தார் ஹிட்மேன்” அடுத்த கேப்டன் இவர்தான்..! 13 ஆண்டுகளுக்கு முன் ரோஹித் சர்மா பதிவிட்ட எக்ஸ் பதிவு வைரல்..!!

By Soundarya on ஐப்பசி 6, 2025

Spread the love

இந்திய அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டி வருகிற 19ஆம் தேதி 23ஆம் தேதி 25ஆம் தேதிகளில் நடக்கிறது. ரோஹித் சர்மா ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றாலும் கேப்டன் பதவியில் இருந்து கழற்றிவிடப்பட்டார். டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் ஒரு நாள் போட்டிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 2027 ஆம் வருடம் உலக கோப்பையை கருத்தில் கொண்டு தேர்வு குழு இந்த முடிவு மேற்கொண்டுள்ளது. அதன் முதல் கட்ட பணியாக தான் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. அவருடைய கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால் அவருடைய கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில் ரோகித் சர்மாவின் பழைய பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 13 வருடங்களுக்கு முன்பு 2012 ஆம் வருடம் ரோகித் தன்னுடைய எக்ஸ் பதிவில், End of an era(45) and the start of a new one(77) என பதிவிட்டிருந்தார். ரோகித் சர்மாவின் ஜெர்சி எண் 45, சுப்மன் கில்லின் ஜெர்சி எண் 77. அந்த வகையில் தனக்கு அடுத்து யாருக்கு கேப்டனாக வரப்போகிறார் என்பதை ரோகித் முன்னரே கணித்து விட்டார் என்று நெட்டிசன்கள் இணையத்தில் ஜாலியாக பதிவிட்டு வருகிறார்கள். இதனை வைத்து 13 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் வருங்கால கேப்டனை ரோஹித் சர்மா கணித்ததாக ரசிகர்கள் அவரது பதிவை வைரலாக்கி வருகின்றனர் .