திமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் விசிக…? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு… செம ஷாக்கில் ஸ்டாலின்..!!

By Soundarya on கார்த்திகை 8, 2025

Spread the love

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டுமென்று திமுக பல வியூகங்களை கையில் எடுத்து செயல்பட்டு வருகிறது. மேலும் கூட்டணியை பலப்படுத்த பல சிறிய கட்சிகளை கூட்டணியில் சேர்த்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேற வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

கூடுதல் தொகுதிகள் மற்றும் அமைச்சரவையில், இடம் தர மறுப்பதால், திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இல்லை என்று தான் அவர் இதுவரை பேசி வருகிறார்.