கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ். 34 வயதான 10 வருடங்களுக்கு முன்பாக சென்னையில் கால் சென்டரில் வேலை பார்த்த போது அவருடன் வேலை பார்த்த மராட்டிய பெண் லேகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மகேஷ் சத்தீஸ்கரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று விட்டார். இதை அடுத்து லேகா கணவர் வீட்டில் தங்கி இருந்து அங்கு ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
அவருடன் கணவரின் தாயார் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் லேகா வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யவில்லை என்று அவருடைய மாமியார் சத்தம் போட்டு திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . இதுகுறித்து காவல்துறையினர்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
