ஜெண்டில்மேன்யா… MGR முதலமைச்சர் ஆனபிறகு போய் பார்த்தா லைஃப் செட்டில்… ஆனாலும் செல்லாத வி கே ராமசாமி..!

By vinoth on ஆகஸ்ட் 14, 2024

Spread the love

விருதுநகர் கந்தன் ராமசாமி என்ற இயற்பெயரை கொண்ட விகே ராமசாமி தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர். 1947 முதல் 2001 வரை 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்தவர்.

சிறுவயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்த விகே ராமசாமி பொன்னுசாமி பிள்ளையின் பாலகானா சபையில் சேர்ந்தார். பின்னர் ஏவிஎம் பிலிம்ஸ் இன் முதல் படமான 1947 ஆம் ஆண்டு வெளியான ‘இருவர்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிக்கும் போது வி கே ராமசாமி அவர்களுக்கு 21 வயது ஆகும். ஆனால் அந்த படத்தில் 60 வயது மகனுக்கு தந்தையாக நடித்தார்.

   

இவர் தன் வாழ்க்கையில் இளமையானக் கதாபாத்திரத்திலேயே நடித்ததில்லை என்று சொல்லிவிடலாம். தமிழ் சினிமாவில் இவரின் நடிப்புப் பாணி மிகவும் வித்தியாசமானது. இவர் பெரிய அளவில் பாடி லாங்குவேஜ் எதுவும் காட்டாமல், தன்னுடைய வாய்ஸ் மாடுலேஷனிலேயே நகைச்சுவையைக் கொண்டு வருபவர்.

   

எம் ஜி ஆருக்கு மிகவும் நெருக்கமான நடிகர்களில் ஒருவராக இருந்த vK ராமசாமி, பெரியளவில் பொருளாதார ரீதியாக வசதியாகவில்லையாம். இதைப் பற்றி அவரின் வளர்ப்பு மகன் ரகு சமீபத்தில் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதில் “எம் ஜி ஆர் முதலமைச்சர் ஆனபோது அவரை பார்க்க சென்ற பழைய நண்பர்களுக்கு எல்லாம் சூட்கேஸ்களில் பணம் கொடுத்து அனுப்பினாராம். அப்போது எல்லோரும் என் அப்பாவை சென்று எம் ஜி ஆரை பார்க்க சொன்னார்கள். ஆனால் அவர் கடைசி வரை போய் பார்க்கவில்லை.

 

அதுபற்றி கேட்டதற்கு “அவர் நம்மள படம் எடுக்க சொன்னாரு. அப்பவே அவரை வச்சு நாம எடுக்கல. இப்போ அவர் முதலமைச்சர் ஆகிவிட்டதால் அவரை போய் காசுக்காக பார்ப்பதா” என சொல்லிவிட்டார்” என்று ரகு தெரிவித்துள்ளார்