2026 தேர்தலில் திமுகவை வீழ்த்த தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்க இபிஎஸ் தொடர்ந்து முயற்சித்து வருவதாக டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கூறி வந்தனர். இந்நிலையில் அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி வைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியை சேர்ந்த சிடிஆர் நிர்மல் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்றும் இதை ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்றும் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போம் என்று அவர் கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சை இபிஸ்க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
