‘நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன்’… ஹார்ட் எமோஜியுடன் வீடியோ வெளியிட்ட விஜே தீபிகா…! அப்படின்னா அது உண்மையா..?

By Begam

Updated on:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் .இந்த சீரியலில் அண்ணன் தம்பி குடும்ப ஒற்றுமை பற்றி விரிவாக எடுத்துக் கூறுவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இந்த சீரியல் அன்பு, பாசம், ஒற்றுமை ,கோபம் ,வெறுப்பு, துரோகம் என அனைத்தையும் ஒருங்கே காட்டி வருகிறது.

   

ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளையும் வெளிச்சம் போட்டு காட்டி வருவகிறது. தற்போது இந்த சீரியல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்பொழுது மீனாவின் அப்பாவின் இந்த நிலைமைக்கு காரணம் பிரசாந்த் தான் என மீனாவுக்கு உண்மைகள் தெரியவந்துள்ளது. இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த சீரியலில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்கள் சரவணன் விக்ரம் மற்றும் விஜே தீபிகா.

இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் விஜே தீபிகா. இவர் தற்பொழுது ஹாட் எமோஜியுடன் பிக் பாஸுக்கு சென்ற சரவண விக்ரமுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்கில் எடுத்துக் கொண்ட வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை அப்படியா இருக்குமோ என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ….

author avatar