என்னது இவங்களுக்கு கல்யாணமாகி 14 வருஷம் ஆச்சா.. கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி பாவனா..!

By Nanthini on மார்கழி 6, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு முன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்கள் மனதில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள்.

   

அதன்படி ஒரு காலத்தில் விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாலினிகளில் ஒருவராக இருந்தவர்தான் பாவனா. இவர் ரேடியோ ஜாக்கியாக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவர் முதன்முதலில் ராஜ் டிவியில் ஒளிபரப்பான பீச் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

   

 

அதன்பிறகு தான் இவர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பிரபலமானார். இதில் இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். அதோடு நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பிறகு இவர் இந்தியாவின் பிரபலமான விளையாட்டு பத்திரிகைகளில் ஒருவராக மாறினார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் ஐபிஎல், உலகக் கோப்பை டி20 மற்றும் கால்பந்து போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். அது மட்டுமல்லாமல் சினிமா தொடர்பான ஆடியோ வெளியீட்டு விழாக்களையும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதனிடையே இவர் தொழிலதிபர் பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் குடியேறினார். இவருக்கு திருமணம் ஆகி சுமார் 14 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இதுவரை அவர் தன்னுடைய கணவரின் புகைப்படத்தை வெளியிட்டதில்லை. தற்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.