விபச்சார வழக்கிலிருந்து துறவறம்… ஆன்மிகப் பாதையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட ‘பாய்ஸ்’ புவனேஸ்வரி!

By vinoth on மார்கழி 6, 2024

Spread the love

ஆந்திராவைச் சேர்ந்தவரான புவனேஸ்வரி ’கந்தா கடம்பா கதிர்வேலா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அவரை பிரபலமாக்கியது பாய்ஸ் படத்தில் அவர் பாலியல் தொழிலாளி கதாபாத்திரம்தான். அதன் பிறகு அவர் பல படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்துக் கலக்கினார்.

அதன்பிறகு சீரியல் பக்கம் திரும்பிய அவர் 2005 ஆம் ஆண்டு பாசமலர் என்ற சீரியல் மூலமாக சின்னத்திரை நடிகையாக கால்பதித்தார். சின்னத்திரையில் பெரும்பாலும் அவருக்குக் கொடூரமான வில்லி வேடம்தான் கிடைத்தது,. அந்த சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து சந்திரலேகா மற்றும் சித்தி உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்திருந்தார்.

   

இந்நிலையில் இவர் சென்னையில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாகப் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் பின்னர் அந்த வழக்கில் நிரபராதி என நிரூபித்து விடுதலை ஆனார். அதன் பின்னரும் இவர் பற்றி சில சர்ச்சையான செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. அதன் பிறகு ஆந்திராவுக்கே சென்று செட்டில் ஆகிவிட்டதாக சொல்லப்பட்டது.

   

இந்நிலையில் திடீரென அவர் இப்போது காசிக்கு சென்று துறவறம் பூண்டு ஆன்மீக சேவையில் இறங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். கோயில்களில் ஆன்மீகப் பணிகள் செய்தல் மற்றும் அன்னதானம் செய்தல் போன்ற பணிகளில் இப்போது அவர் ஈடுபட்டு வருகிறார்.

 

இது சம்மந்தமாகப் பேசியுள்ள அவர் “ சொந்த ஊர் ஆந்திராவாக இருந்தாலும் தமிழ் சினிமாவில்தான் எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால்  எனக்குக் கவர்ச்சி வேடங்களாகதான் வந்தது. எனக்கு நல்ல நடிகையாக பேர் வாங்க வேண்டும் என ஆசை. ஆனால் அது நடக்கவில்லை. இருந்தபோதும்  வாழ்க்கை சீராக சென்றது. திடீரென ஒரு எதிர்பாராத சிக்கலில் சிக்கினேன். நான் நிரபராதி என அறிவிக்கப்பட்டாலும் சமூகம் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து அதேப் பார்வையே என் மேல் இருந்தது.

அதனால்தான் இப்போது ஆன்மிகப் பணிகளில் இறங்கிவிட்டேன்.  காசிக்கு சென்று துறவறம் பெற்று இப்போது ஆன்மீக சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன். சென்னையில் எனக்கு சொந்தமான வீடுகளில் இருந்து வரும் வாடகை மூலமாக என் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு மீதிப் பணத்தை ஆன்மீகப் பணிகளுக்கு செலவிடுகிறேன்” எனக் கூறியுள்ளர்.