#image_title
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கலக்கியவர் மயில்சாமி. பாக்யராஜ் இயகிய தாவணிக் கனவுகள் படத்தில் கூட்டத்தில் ஒருவராகத் தோன்றி தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் மயில்சாமி.
படிப்படியாக வளர்ந்து முன்னணி நகைச்சுவை நடிகரானார். தனக்குப் பின்னால் வந்த விவேக் மற்றும் வடிவேலு ஆகியோருடன் கூட ஈகோ இல்லாமல் நடித்துள்ளார். அதே போல தமிழ் சினிமாவில் மயில்சாமி சேர்ந்து நடிக்காத நகைச்சுவை நடிகர்களே இல்லை என்று சொல்லலாம்.
சினிமா மட்டும் இல்லாமல் மயில்சாமி சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். நான் அவன் இல்லை, தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட படங்கள் மயில்சாமிக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
#image_title
சிவபக்தரான மயில்சாமி சிவன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு வந்த அன்றே அவரின் உயிர் பிரிந்தது. மயில்சாமியின் இறப்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அவர் வாழ்ந்த பகுதி மக்களைக் கூட பெரிய அளவில் சோகத்தில் ஆழ்த்தியது. அந்த அளவுக்கு அவர் அந்தப் பகுதி மக்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்திருந்தார்.
இந்நிலையில் மயில்சாமியின் வள்ளல் தன்மை பற்றி மறைந்த நடிகர் விவேக் ஒரு மேடையில் பேசும்போது “மயில்சாமி எப்படிப்பட்டவன்னா?, அவனுக்கு ஒன்னு பிடிச்சிருச்சின்னா கொண்டாடி தீத்துடுவான். ஒருநாள் புத்தாண்டு பார்ட்டியில் ஒருத்தன் பாட்டு பாடிட்டிருந்தான். மயிலுக்கு அவன் பாடுறது ரொம்ப புடிச்சுப் போச்சு. அவனுக்கு எதாவது பணம் குடுக்கணும்னு என் கையில இருந்த பணத்த வாங்கி அவனுக்குக் குடுத்திட்டான்.
அதே போல கடலூரில் புயல் வந்து மக்கள் பாதிக்கப்பட்ட போது அப்பகுதி மக்களுக்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் பெரிய அளவில் உதவி செய்துள்ளார். அவருக்கு எதாவது செய்யணும் என்று முடிவெடுத்த மயில்சாமி நேரே கடலூருக்கு சென்று தன் கழுத்தில் இருந்த எம் ஜி ஆர் சங்கிலியை எடுத்து அவர் கழுத்தில் போட்டுவிட்டு ஒன்றுமே பேசாமல் வந்துவிட்டான்” எனக் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…