#image_title
தமிழ் சினிமாவில் 40 களில் இருந்து 70 களின் இறுதிவரை தொடர்ச்சியாக படங்கள் எடுத்து இந்தியா முழுவதும் அவற்றை ரிலீஸ் செய்து வெற்றிகொடி நாட்டிய நிறுவனம் ஏவிஎம். அந்த நிறுவனத்தின் நிறுவனர் ஏ வி மெய்யப்ப செட்டியார் இறந்த போது சில ஆண்டுகள் அவர்கள் படம் தயாரிக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கிய ஏவிஎம் நிறுவனம் முரட்டுக்காளை மற்றும் சகலகலா வல்லவன் ஆகிய படங்கள் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து படங்கள் தயாரித்தனர். அப்போது மாஸ் ஹீரோக்களுக்கான படங்கள் மட்டும் இல்லாமல், குடும்ப ரசிகர்களுக்கான குடும்பக் கதை கொண்ட படங்களையும் எடுத்தனர்.
அப்படி அவர்கள் எடுத்த ஒரு திரைப்படம்தான் விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம். மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுத்து சூப்பர்ஹிட் ஆன அந்த படம் வசூலை வாரிக் குவித்ததோடு தேசிய விருதையும் பெற்றது. வெறும் 15 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் விசுவுடன் ரகுவரன், லட்சுமி, கமலா காமேஷ், மனோரமா, சந்திரசேகர், காஜா ஷெரீப், டெல்லிகணேஷ் உள்ளிட்ட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.
இந்த படத்துக்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் ஒரு செட் அமைக்கப்பட்டு, அதில்தான் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது விசு இயக்கிய சில படங்கள் தோல்வி அடைந்தததால் இந்த படத்துக்கு பெரிய முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லையாம் ஏவிஎம் நிறுவனம். ஆனால் படம் ரிலீஸான பின்னர் ஏவிஎம் நிறுவனத்தின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது.
தேசிய விருதை வாங்க செல்ல இருந்த விசுவிடம் இந்தப் பட வெற்றிக்காக உனக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட போது, தேசிய விருது வாங்கும் நிகழ்வினை எனது குடும்பத்தார் காணும்படி விமானத்தில் முதல்வகுப்பு பயணத்துடன் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்க, உடனே ஏ.வி.எம் சரவணன் விசு கேட்டது போலவே அவர்களை விமானத்தில் முதல் வகுப்பில் அழைத்துச் சென்றிருக்கிறார்.
ஆனால் படத்தின் தயாரிப்பாளரான தான் இரண்டாம் வகுப்பில்தான் பயணித்துள்ளார். எனக்கு முதல் வகுப்பு போட்டுவிட்டு நீங்கள் ஏன் இரண்டாம் வகுப்பில் வருகிறீர்கள என விசு கேட்ட போது உங்கள் சந்தோஷமே எனக்கு முக்கியம் எனக் கூறியுள்ளார்.
மும்பையில் பெய்து வரும் பலத்த பருவமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்த கனமழையின் தாக்கத்தால் ஆங்காங்கே…
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், முறையான சாலை வசதியும் ஆம்புலன்ஸ் சேவையும் இல்லாததால், பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில்…
சாலை விபத்துகளில் சிக்குபவர்களைக் கட்சிப் பாகுபாடின்றி மீட்டு, அவர்களுக்குத் தகுந்த முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் முன்னாள்…
அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால தேர்தல் வியூகங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், பெங்களூருவில் வெறும் 31 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 2.5 மணி நேரம்…
சமூக அழுத்தங்களுக்காகவும், சடங்குகளுக்காகவும் மட்டுமே வாழும் இன்றைய சூழலில், ஒரு குழந்தை பிறப்பிற்குப் பின்னால் இருக்கும் பொறுப்பை உணர்ந்து நடிகை…