Categories: சினிமா

தேசிய விருது பெற்ற படத்திற்காக பரிசு கேட்ட விசு… ஷாக் கொடுத்த AVM சரவணன்…

Spread the love

மீனாட்சி சுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் என்ற இயற்பெயரை கொண்ட விசு தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுத்தாளர் திரைப்பட இயக்குனர் நடிகர் வசனகர்த்தா இயக்குனர் என பன்முகங்களைக் கொண்டு 1980களில் தமிழ் சினிமாவையே தனது கைக்குள் வைத்திருந்தவர். விசு ஆரம்பத்தில் ஒய் ஜி பார்த்தசாரதியின் நாடகக் குழுவில் இருந்து நாடகக் கலைஞராக தனது வாழ்க்கை தொடங்கினார் விசு.

அதற்குப் பிறகு இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்களிடம் உதவி இயக்குனராக சேர்ந்து பல மேடை நாடகங்களுக்கு வசனம் எழுதி வந்தார் விசு. அதற்குப் பிறகு கே. பாலச்சந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் தில்லுமுல்லு நெற்றிக்கண் உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை எழுதினார் விசு. இவர் வசனம் எழுதிய தில்லு முல்லு நெற்றிக்கண் ஆகிய இரண்டு திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். ந்த திரைப்படமும் அவருக்கு பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

1982 ஆம் ஆண்டு கண்மணி பூங்கா என்ற திரைப்படத்தின் மூலம் விசு தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதற்கு அடுத்ததாக மணல் கயிறு, டௌரி கல்யாணம், சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி அவள் கண்மணி, வேடிக்கை என் வாழ்க்கை, பட்டுக்கோட்டை பெரியப்பா உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் விசு. இவருக்கு அதிகமாக பெண் ரசிகைகள் தான் இருந்தார்கள்.

ஏனென்றால் இயக்குனர் விசு அவர்களின் படங்களில் எல்லா கதாபாத்திரங்களும் ஒரே சமமான மரியாதையை கொடுத்திருப்பார். பெண்கள் ஆண்கள் என பிரித்து கூட்டி குறைத்து வைத்திருக்க மாட்டார். கூட்டு குடும்பத்தின் அவசியத்தை புரிய வைக்கும் படியாகவும் பெண்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இவரது படங்கள் அமைந்ததால் பெண்கள் ஆதரவு இவருக்கு அதிகமாக இருந்தது. இவரது படங்கள் ஹிட் ஆகவும் ஆனது.

அப்படி இயக்குனர் விசு இயக்கி 1986 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சம்சாரம் அது மின்சாரம். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று தேசிய விருதையும் வென்றது. இந்த படத்தை தயாரித்தவர் ஏவிஎம் சரவணன் ஆவார். இந்த படம் தேசிய விருது பெற்றதற்காக விசு ஏவிஎம் சரவணன் அவர்களிடம் ஒரு பரிசை கேட்டிருக்கிறார்.

விசு கேட்டது என்னவென்றால் தேசிய விருதை வாங்க விமானத்தில் செல்லும்போது எனது குடும்பத்தாரும் கூட வருவார்கள். அனைவருக்கும் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். உடனே ஒப்புக்கொண்ட ஏவிம் சரவணன் விசுவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டை போட்டுவிட்டு அவர் எகனாமிக் கிளாசில் பயணம் செய்திருக்கிறார். இதை பார்த்து விசு பதற்றம் அடைந்து ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு நீங்கள் நல்ல படம் எடுத்து விருது வாங்கி என்னை மகிழ்ச்சி படுத்திட்டீங்க. உங்கள மகிழ்ச்சி படுத்துவதற்கு என்னால இதைத்தான் செய்ய முடியும் என்று ஷாக் கொடுத்திருக்கிறாய் ஏ வி எம் சரவணன்.

admin

Recent Posts

நொடிப் பொழுதில் மிரட்டிய மரணம்…! மும்பை ரயில் நிலையத்தை உலுக்கிய பயங்கரம்… பிரம்மாண்ட மரம் வேரோடு சாய்ந்து… போக்குவரத்து முற்றிலும் முடக்கம்… அதிர்ச்சியில் நெட்டிசென்கள்…!!

மும்பையில் பெய்து வரும் பலத்த பருவமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்த கனமழையின் தாக்கத்தால் ஆங்காங்கே…

7 minutes ago

“மரணம் கூட நிம்மதி இல்லாமயா…” காணக் சகிக்காத அவலம்… அமைச்சரின் ஊரிலேயே ஆம்புலன்ஸ் இல்லையா?… அரசை உலுக்கும் பழங்குடியினப் பெண்ணின் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், முறையான சாலை வசதியும் ஆம்புலன்ஸ் சேவையும் இல்லாததால், பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில்…

8 minutes ago

“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்”… விஜயபாஸ்கரை சுற்றும் ‘சாலை விபத்து’ மர்மம்… காவலரைக் காப்பாற்றிய மாஜி அமைச்சர்… நடுரோட்டில் நெகிழ்ச்சி சம்பவம்…!

சாலை விபத்துகளில் சிக்குபவர்களைக் கட்சிப் பாகுபாடின்றி மீட்டு, அவர்களுக்குத் தகுந்த முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் முன்னாள்…

19 minutes ago

“அதிமுகவில் டிடிவி தினகரன்…?” – ஓப்பனாக கேட்ட நிர்வாகி… எடப்பாடி கொடுத்த ஷாக்கிங் பதில்…! டெல்டாவில் பெரும் அதிர்வு…!!

அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால தேர்தல் வியூகங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

19 minutes ago

“அடேங்கப்பா… 31 கி.மீ கடக்க 2.5 மணி நேரமா…?!” – பெங்களூரு டிராபிக்கில் சிக்கித் தவித்த இன்போசிஸ் இணை நிறுவனர்…! இணையத்தை உலுக்கும் பதிவு…!!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், பெங்களூருவில் வெறும் 31 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 2.5 மணி நேரம்…

27 minutes ago

சிங்கள் லைப் தான் கெத்து… “பெத்தெடுத்தா மட்டும் போதாது…” கல்யாணம், குழந்தை எல்லாம் நோ… ஓப்பனாக பேசிய நடிகை பார்வதி… இணையத்தை உலுக்கும் புதிய சர்ச்சை…!

சமூக அழுத்தங்களுக்காகவும், சடங்குகளுக்காகவும் மட்டுமே வாழும் இன்றைய சூழலில், ஒரு குழந்தை பிறப்பிற்குப் பின்னால் இருக்கும் பொறுப்பை உணர்ந்து நடிகை…

31 minutes ago