தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஆரியா. போலாந்து நாட்டில் நடைபெற்ற அயர்ன்மேன் டிரையத்லான் போட்டியில் கலந்து கொண்ட மூன்று இந்திய வீரர்களில் ஒருவர் என்ற பெருமையை பெற்றிருக்கின்றார். தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களாக தன்னுடைய சிறப்பான நடிப்பால் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் ஆர்யா. தொடர்ந்து சினிமாவில் முன்னணி இடத்தை பிடிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றார் .
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து அசத்தி வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சார்பாட்டா பரம்பரை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து காதர் பாட்ஷா என்கின்ற முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை கொடுத்திருந்தது. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை சாய்ஷாவை திருமணம் செய்து கொண்டார்.
கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காரணமாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் இவர்கள் காப்பான் மட்டும் டெடி திரைப்படத்தில் சேர்ந்து நடித்திருந்தார்கள். பின்னர் குழந்தை பெற்றுக் கொண்ட சாயிஷா நீண்ட இடைவெளிக்கு பிறகு பத்து தல என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார்.
இந்நிலையில் நடிகர் ஆர்யாவை அவருடைய நண்பரான இயக்குனர் விஷ்ணு வரதன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இருவரும் சேர்ந்து போன் செய்து பிராங்க் செய்கிறார்கள். கடைசியில் ஆர்யா கண்டுபிடித்து விடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Nesippaya – Fun call with Arya from Vishnuvardhan & Yuvan 😁pic.twitter.com/qvgLciks1x
— AmuthaBharathi (@CinemaWithAB) January 10, 2025