விஜய்யின் ஜனநாயகன் பட விவகாரம்… 8 கோடி மக்கள் எதைப் பார்க்கணும் என்பதை 5 பேர் முடிவு செய்வதா..? தணிக்கை குழுவை விளாசிய விஷால்..!!

By Soundarya on மாசி 23, 2026

Spread the love

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு (Censor Board) சான்றிதழ் அளிக்க மறுத்த விவகாரத்தில், திரையுலக அமைப்புகள் ஏன் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு நடிகர் விஷால் பதிலளித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், தணிக்கை குழுவில் உள்ள ஐந்து நபர்கள் சேர்ந்து, எட்டு கோடி மக்கள் எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று காட்டமாகக் கூறியுள்ளார். தணிக்கை குழுவின் இத்தகைய செயல்பாடுகள் ஒரு விதியாகவே மாறிவிட்டதை அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், இந்தப் பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் ஏன் தலையிடவில்லை என்ற கேள்விக்கு, சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் முறையாகச் சங்கத்தை அணுகியிருந்தால் தாங்கள் உதவி செய்திருக்க முடியும் என்று விஷால் விளக்கம் அளித்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது தாங்கள் நேரடியாகத் தலையிட முடியாது என்றும், எனினும் இந்த விவகாரத்தில் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதே தனது கருத்து என்றும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.