விஜய்யுடன் மோதிப் பார்க்க தயாரான விஷால்.. இது உங்களுக்கு ஓவர் கான்பிடென்ட்டா இல்ல..!

By Mahalakshmi on ஆடி 21, 2024

Spread the love

நடிகர் விஷால் விஜயுடன் மோத இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய். இவரை பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று பலரும் அழைப்பார்கள். இவரது திரைப்படங்கள் எப்போதும் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்பதால் இயக்குனர்கள் பலரும் இவரை வைத்து படம் இயக்குவதற்கு போட்டி போடுவார்கள்.

   

   

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் உடன் சேர்ந்து மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கின்றார்.  மேலும் நடிகர் அஜ்மல், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றார்கள்.

 

மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருக்கின்றது. நடிகர் விஜய் அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடித்துவிட்டு அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி முழு நேரமும் அரசியலில்  ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. இந்நிலையில் தற்போது விஷாலின் மதகஜராஜா திரைப்படம் நடிகர் விஜய்யின் கோட் திரைப்படத்துடன் மோத இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

10 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் இருக்கும் மகாராஜா திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி தான் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. அதன்படி நடிகர் விஷால் விஜயுடன் போட்டி போட இருக்கின்றார். ஏற்கனவே நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியவுடன் போட்டிக்கு நடிகர் விஷாலும் ஒரு கட்சியை தொடங்கியிருந்த நிலையில் நடிகர் விஜய் உடனே எப்போதும் வம்புக்கு சென்று கொண்டிருக்கின்றார் நடிகர் விஷால்.