போட்டி போட வேற ஆளே கிடைக்கலையா..? விஜயுடன் மோத பிடிவாதம் பிடிக்கும் பிரபல நடிகர்.. சிக்கி தவிக்கும் தயாரிப்பாளர்..!

By Priya Ram on ஆகஸ்ட் 1, 2024

Spread the love

முன்னணி நடிகரான விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மைக் மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிவடைந்ததால் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

   

செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி கோட் திரைப்படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனது 69-ஆவது படத்துடன் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போகிறார்.

   

 

இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த நிலையில் பிரபல நடிகரான விஷால் கடந்த 2012-ஆம் ஆண்டு மதகஜராஜா படத்தில் நடித்து முடித்தார். இந்த படத்தில் அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். நிதி பிரச்சனை உள்ளிட்ட சிக்கல்கள் காரணமாக படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போனது.

இந்த நிலையில் கோட் திரைப்படம் ரிலீஸ் தேதி அன்று தான் மதகஜராஜா படத்தையும் ரிலீஸ் செய்ய வேண்டும் என விஷால் பிடிவாதமாக கூறுகிறாராம். கோட் திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளதால் மதகஜராஜா படத்தின் தயாரிப்பாளர் விஷாலை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறாராம். விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.