சமீபத்தில் தான் விஜய் அவர்கள் தன் நடிப்புத் துறையை விட்டுவிட்டு முழு நேரமாக அரசியலுக்கு வந்து தன் மக்களுக்கு தொண்டு செய்யப் போவதாக அறிவித்திருந்தார். அந்த அதிர்வலையே இன்னும் நம் தமிழ்நாட்டில் அடங்கவில்லை, அதற்குள் இன்னொரு அதிர்வலையாக கிளப்பியுள்ளார் புரட்சித் தளபதி விஷால் அவர்கள்.

#image_title
விஷால் அவர்கள் சில வருடங்களுக்கு முன்னால் ஆர் கே நகர் தொகுதி எலக்ஷனில் நின்று படுதோல்வியாகி சம்ம பல்பு வாங்கி இருந்தார், தேர்தலில் அவர் நாமினேஷன் செய்யப் போவதே பெரும் சர்ச்சையாகவும் எதிர்ப்புகளும் நிறைந்திருந்தது, அதையும் மீறி எலெக்ஷனில் நிற்க தயாரான பொழுது பல சர்ச்சைகள் கிளம்பி அவர் நாமினேஷன் செய்யும் விண்ணப்பத்தாளில் பல பிழைகள் உள்ளது என்று நிராகரிக்கப்பட்டு அதை திருத்தம் செய்து, மீண்டும் நாமினேஷன் செய்தும், அவரால் அந்த எலக்ஷனில் சரியான வாக்கு பெற முடியவில்லை, சொல்லப்போனால் அந்த தேர்தலில் அவர் ஹீரோவாக களம் இறங்கி காமெடி ஆகத்தான் களத்தில் இருந்து வெளியேறினார்.

#image_title
தற்போது நடிகர் தளபதி விஜய் அவர்கள் நிதானமாக தெளிவாக முடிவெடுத்து, பொறுமையாக அரசியல் களத்தில் களமிறங்கினார். அந்த சர்ச்சை தீர்வதற்குள், புரட்சித் தளபதி விஷால் அவர்கள் தளபதி விஜய் அவர்களின் போலவே இன்ஸ்டாகிராமில் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிக்கை ஒன்று அறிவித்திருந்தார். அதற்கு மக்கள் பலபேரும் இளைய தளபதி விஜய் தற்போது தளபதி விஜய் ஆக மாறி தலைவர் விஜய் ஆக மாறிவிட்டார், ஆனால் நீங்கள் இன்னும் புரட்சி தளபதியாக இருக்கிறீர்கள் எப்போ தளபதியாய் மாறி எப்ப தலைவனாக மாற போகிறீர்கள் என்று கலாய்த்து வருகிறார்கள்.

#image_title
தற்போது நிகழ்வுபடி விஷால் அவர்கள் துப்பறிவாளன் 2 படத்திற்காக லொகேஷன் பார்ப்பதற்கு வெளிநாடு சென்று இருக்கிறார். அந்தப் படத்தின் லொகேஷன் பார்த்துவிட்டு அந்த படப்பிடிப்பு முடிந்து வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு திரும்பி வந்து கட்சியின் பெயரை அறிவிப்பதற்குள் 2026 எலக்சன் முடிந்து விடும். என்று பலரும் காமெடியாக விமர்சித்து வருகிறார்கள்.

#image_title