“அவ்ளோ தான்…” விஜயின் அரசியல் வருகை குறித்து சர்ச்சையான கருத்து கூறிய நடிகர் வடிவேலு… கொந்தளிக்கும் தவெக தோழர்கள்…

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்பொழுது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். மேலும் சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபட போவதாக அவர் வெளியிட்ட அறிக்கை தமிழக அரசியல்வாதிகளை கதிகலங்க வைத்துள்ளது.

   

புதிய அரசியல் கட்சிக்கு தொடங்கிய தளபதிக்கு திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் அரசியல் வரவு குறித்து வடிவேலு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சமீபத்தில் தாயாரின் ஆத்மா மோட்சம் அடைய வேண்டுமென வேண்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் நந்தீஸ்வரருக்கு முன்பு மோட்ச தீபம் ஏற்றினார் வடிவேலு. இதனை தொடர்ந்து பத்திரிகையாளரை சந்தித்து பேசிய வடிவேலுவிடம் செய்தியாளர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளது பற்றி கருத்து கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த வடிவேலு, “நீங்களும் வீடியோ எடுத்துக்கொண்டே இருக்காமல் நீங்களும் கட்சி ஆரம்பிக்க வேண்டியது தானே. இப்படியே கேமராவை பிடிச்சிக்கிட்டு வேல பாக்கப்போறீங்களா..? டக்குன்னு நீங்களும் உள்ள வந்து நீங்களும் புது கட்சி ஆரம்பிங்க. எல்லாரும் அரசியல் கட்சி ஆரம்பிச்சிட்டு போக வேண்டியது தானே? யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

மக்களுக்கு நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். டி ராஜேந்தர் வந்தார், ராமராஜன் வந்தார், பாக்யராஜ் வந்தார். ஆகவே, மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம். வரக்கூடாது என யாரும் சொல்ல முடியாது அல்லவா? ” என்று பங்கமாக கலாய்த்துள்ளார். இதனால் தற்பொழுது தளபதி ரசிகர்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். இதோ அந்த வீடியோ…

https://fb.watch/q389KiDGTB/