விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரை சேர்ந்த வசந்தகுமார் (21) என்பவருடைய தந்தை வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்ததால் வசந்தகுமார் அவரது பாட்டி வீட்டில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். அப்போது வசந்தகுமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜான்பாண்டியன் என்ற நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறிய இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்துள்ளனர். இதனிடையே ஜான் பாண்டியனுக்கும் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டபோது வசந்தகுமார் தன் நண்பர் ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக பேசியதால் வேல்முருகன் வசந்தகுமாரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே முன்பகை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வசந்தகுமாருக்கும் வேல்முருகனுக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வேல்முருகனும் அவருடைய தந்தை பரமசிவமும் இணைந்து வசந்தகுமாரை கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் வசந்தகுமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் பதிலுக்கு வசந்தகுமார் தாக்கியதில் பரமசிவத்திற்கு கையில் காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்த பரமசிவம் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். ஆனால் வசந்தகுமார் சிகிச்சை எடுக்காமல் காயத்துடன் பாட்டி வீட்டுக்கு சென்று விட்டார்.
பகல் முழுவதும் இவரை காணாத உறவினர்கள் பாட்டி வீட்டுக்கு சென்று பார்த்தபோது ரத்த காயத்துடன் அவர் உயிரிழந்து கிடந்தார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ஜான்பாண்டியன், வேல்முருகன், பரமசிவம் மற்றும் மாசானம் ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…
திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…
பெங்களூருவின் பன்னேருகட்டா பகுதி அருகே சி.கே. பாளையா சாலையில் அமைந்துள்ள 'ஹலேவூரு கபாப் சென்டர்' உணவகத்தில் அக்டோபர் 28 அன்று…